Home One Line P1 3 ஆண்டுகளுக்குப் பிறகு பெர்சாத்து கட்சியில் தேர்தல் அறிவிப்பு!

3 ஆண்டுகளுக்குப் பிறகு பெர்சாத்து கட்சியில் தேர்தல் அறிவிப்பு!

705
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி நிறுவப்பட்டப் பிறகு, முதன்முறையாக, பெர்சாத்து கட்சி வருகிற ஜனவரி 25 முதல் அனைத்து மட்டங்களிலும் தேர்தல்களை எதிர்கொள்ள உள்ளது.

மகளிர் மற்றும் இளைஞர் பிரிவுகள் உள்ளிட்டு, கிளை, தொகுதி மற்றும் உச்சமட்ட தலைமைக் குழு மட்டங்களில் தேர்தல் நடக்கும் என்று கட்சி தேர்தல் குழுத் தலைவர் டான்ஸ்ரீ சைட் ஹாமிட் ஜாபார் அல்பர் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.

கிளைகள் அந்தந்த கிளைத் தலைமைகளை தேர்தெடுப்பதோடு, அக்கிளைகள் அமைந்துள்ள தொகுதி தலைமைகளையும் தேர்ந்தெடுக்கும்.”

#TamilSchoolmychoice

இதனையடுத்து, ஏப்ரல் 4-ஆம் தேதி, தொகுதி அளவிலான உச்சக்கூட்டம் நடத்தப்படும் அதே நேரத்தில், மத்தியில் கட்சித் தலைமைத் தேர்தல் நடக்கும் என்று அவர் தெரிவித்தார்.