Home One Line P2 மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டிக்கான நேர்முகத் தேர்வு இனிதே தொடங்குகிறது

மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டிக்கான நேர்முகத் தேர்வு இனிதே தொடங்குகிறது

740
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 18 முதல் 28 வயதிலான அனைத்து மலேசியர்களும் அஸ்ட்ரோ உலகம் பிரத்தியேகமாக வழங்கும் மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான RAP Porkalam- என்ற போட்டிக்கான நேர்முகத்தேர்வில் பங்கேற்க இதோ வந்துவிட்டது ஓர் அரிய வாய்ப்பு.

இப்போட்டியின் நேர்முகத்தேர்வு ஜனவரி 11 ஆம் தேதியன்று கோலாலம்பூரில் அமைந்துள்ள அஸ்ட்ரோ புக்கிட் ஜலீலில் காலை மணி 10 முதல் மதியம் மணி 1 வரை மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

‘RAP PORKALAM’ – பற்றிய சில விவரங்கள்

• ராப்பராக மகுடம் சூட வேண்டும் என்பது உங்களுடைய நீண்ட நாள் கனவாக இருக்குமாயின், நீங்கள் ஓர் இசைத் தாளத்தை இசைக்கும் பொழுது உங்களை சுற்றியுள்ள மக்கட் கூட்டம் ஆரவாரத்தோடு உங்களை உற்சாகப் படுத்துவதை நீங்கள் விரும்பினால், உங்கள் கனவை நினைவாக்க இதுவே ஓர் அரிய வாய்ப்பு!

#TamilSchoolmychoice

18 முதல் 28 வயதிலான அனைத்து மலேசியர்களும், வரும் ஜனவரி 11, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, கோலாலம்பூரில் அமைந்துள்ள அஸ்ட்ரோ புக்கிட் ஜலீலில் நடைப்பெறவிருக்கும் RAP Porkalam-இன் நேர்முகத்தேர்வில் கலந்து திறமையை வெளிக்கொணர திரண்டு வாரீர் என அஸ்ட்ரோ அழைப்பு விடுத்துள்ளது.

• நேர்முகத்தேர்வின் போது, போட்டியாளர்கள், கொடுக்கப்பட்டுள்ள மூன்று இசை பதிவில் ஒன்றினை தேர்வு செய்து குறைந்தது 1 நிமிடத்திற்கு தமிழில் ராப் செய்ய வேண்டும்.

• 16 திறமையாளர்கள் நேர்முகத்தேர்வில் அடையாளம் காணப்பட்டு, பின்னர் பல நீக்கங்களை உள்ளடக்கியிருக்கும் தீவிர ராப் போர் சுற்றுகளுக்கு உட்படுத்தப்படுவதோடு, அடுத்த சுற்றுக்கு முன்னேறுபவர்கள் பார்வையாளர்களின் வாக்குகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவர்.

• முதல் நிலையில் வாகை சூடுபவர் சுமார் 5000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வதோடு Sony Music Malaysia-வுடன் இணைந்து தனது முதல் தனி இசை ஆல்பத்தை (சிங்கள்) வெளியீடு செய்யும் ஓர் அற்புதமான வாய்ப்பைப் பெறுவார்.

அதே வேளையில், இரண்டாம் நிலையில் வெற்றி பெறுபவர் சுமார் 2000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வதோடு அவரது விருப்பத்திற்கு இணங்க Sony Music Malaysia-வுடன் இணைந்து தனது முதல் தனி இசை ஆல்பத்தை (சிங்கள்)  வெளியீடு காணும் வாய்ப்பு வழங்கப்படும்.

மேல் விவரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு, www.astroulagam.com.my/RapPorkalam எனும் அகப்பக்கத்தை வளம் வாருங்கள்.