Home One Line P1 “புதிய கல்வி அமைச்சரை நானே தீர்மானிப்பேன்!”- துன் மகாதீர்

“புதிய கல்வி அமைச்சரை நானே தீர்மானிப்பேன்!”- துன் மகாதீர்

781
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய கல்வி அமைச்சரை நியமிப்பது குறித்து தாம் முடிவு செய்ய இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதி, டாக்டர் மஸ்லீ மாலிக் பதவி விலகியதைத் தொடர்ந்து கருத்துரைத்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

​​”இது எனது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருப்பதால், அப்பதிவியை யார் வகிப்பது என்பது என்னால் தீர்மானிக்கப்படும்என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சுல்தான் சல்மான் அனைத்துலக பாதுகாப்பு மையத்தை மீண்டும் திறக்க முயன்றதன் காரணமாக மஸ்லீ பதவி விலகினாரா என்று கேட்டதற்கு, டாக்டர் மகாதீர் இந்த விவகாரத்திற்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

மஸ்லீ பதவி விலகியதற்கு பல காரணங்கள் இருப்பதாக அவர் கூறினார்.

நான் அவருக்கு எழுதிய கடிதம் பொறுப்பற்ற நபர்களால் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. பல காரணங்கள் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அவர் செய்த அனைத்தும் தவறு என்று நான் கூறவில்லை.”

அவர் சரியாகச் செய்த சில விஷயங்கள் உள்ளன, ஆனால், சில காரணங்களால், அவர் பதவி விலகுவது அவசியம் என்று நான் நினைத்தேன், அவரும் ஏற்றுக்கொண்டார்.என்று அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதி கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் மஸ்லீ கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்