Home One Line P1 கே.செந்தில் வேலு வீட்டில் சிவப்பு சாயமும், கோழியின் சடலமும் வீசப்பட்டன!

கே.செந்தில் வேலு வீட்டில் சிவப்பு சாயமும், கோழியின் சடலமும் வீசப்பட்டன!

1350
0
SHARE
Ad
படம்: நன்றி ராசா நாடாளுமன்ற உறுப்பினர், சா கீ சின் முகநூல் பக்கம்

சிரம்பான்: சிரம்பான் நகராட்சி மன்ற உறுப்பினர் கே.செந்தில் வேலுவின் கார் மீது சிவப்பு நிற சாயம் வீசப்பட்ட நிலையில், கோழியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றியதற்காக செந்தில் வேலு மீது விசாரணை நடத்தப்படும் என்று காவல் துறை நேற்று திங்கட்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த விஷயத்தில் இதற்கும், ஜாகிர் நாயக் பதிவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஊகிக்க செந்தில் வேலு மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

நான் ஊகிக்க விரும்பவில்லை, இதனை நான் காவல் துறையினரிடம் ஒப்படைக்கிறேன்என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில், சிவப்பு நிற சாயம் அதிகாலை 12.20 மணியளவில் நீலாயில் உள்ள அவரது இல்லத்தில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது வீடு முழுவதும் சிவப்பு நிற சாயத்தின் கசிவுகள் காணப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து தாம் காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக செந்தில் வேலு உறுதிப்படுத்தினார்.