அன்வாரின் தவறுகள் அனைத்தையும் வெளியே கொண்டுவரும் நோக்கத்திலும், அதோடு அன்வாரின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும், பபகொமோ இந்த முடிவை எடுத்திருப்பதாக முகமது ரபீ கூறினார்.
பபகொமோ (Papagomo) என்ற பெயரிலான தனது இணைய தளப் பக்கத்தில், கடந்த மார்ச் 16 ஆம் தேதி அன்வாரைப் போன்று தோற்றமளிக்கும் ஒருவருடைய புகைப்படத்தை வெளியிட்டதற்காக,அவர் மீது எதிர்க்கட்சி தலைவராகிய அன்வார் இப்ராகிம் அவதூறு வழக்கு தொடுத்தார்.அதனைத் தொடர்ந்து பபகொமோ அந்த சர்ச்சைக்குரிய காணொளியையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.