கோலாலம்பூர்: ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் விவகாரத்தில் உலகளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட இது ஒரு நல்ல நேரம் என்று பிதரமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இன்றைய அளவில் இஸ்லாமிய நாடுகளிடையே ஒற்றுமை இல்லை என்றும் அவர் கூறினார்.
பாக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதி காசிம் சுலைமணியைக் கொன்ற அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல என்று அவர் தெரிவித்தார்.
“முஸ்லீம் நாடுகள் ஒன்றுபடுவதற்கான சிறந்த நேரம் இது, இருப்பினும், அவர்கள் ஒன்றுபடவில்லை.”
“பயங்கரவாதிகளை அழிப்பதாகக் கூறி, எல்லைக்கு வெளியே ஜாமால் கஷோகியைக் கொன்றார்கள்.”
“இந்த முறை வேறொரு நாட்டின் தலைவரைக் கொல்ல அமெரிக்கா முடிவு செய்துள்ளது, எனவே இது சட்டவிரோதமான செயல்.”
“ உலகம் பாதுகாப்பாக இல்லை. யாராவது அவமதிக்கப்பட்டால், யாராவது அதை விரும்பவில்லை என்றால், அவர்கள் நாட்டிற்கு டிரோன்களை அனுப்பலாம் மற்றும் தாகுதல்கள் நடத்தலாம்”என்று அவர் நேற்று செவ்வாயன்று புத்ராஜெயாவில் கூறினார்.