Home One Line P1 “நான் ஏன் உண்மையைக் கண்டறியும் சோதனையைச் செய்ய வேண்டும்?!”- அன்வார்

“நான் ஏன் உண்மையைக் கண்டறியும் சோதனையைச் செய்ய வேண்டும்?!”- அன்வார்

661
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தனது முன்னாள் ஆய்வு உதவியாளரான முகமட் யூசுப் ராவுத்தர் செய்த பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கைகள் குறித்து காவல் துறையில் உண்மையைக் கண்டறியும் சோதனையை நடத்துவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

“வெளிப்படையாக, இது ஒரு நியாயமற்ற விஷயம்.”

இதற்கு அடிப்படையான சான்றுகள் அவசியமாக இருக்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லை,  சாட்சிகளும் இல்லை, இடமும் இல்லை, எல்லாம் சரியாக இல்லை, எனவே சோதனை ஏன் செய்ய வேண்டும்?”  என்று நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னாதாக சிலாங்கூர் பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் ரோஸ்லான் ஷாஹிர் முகமட் ஷாஹிர், அன்வாரும் உண்மையைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார்.

இன்றுவரையிலும், அந்த சோதனையைச் செய்யுமாறு காவல் துறையினரிடமிருந்து தமக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று அன்வார் கூறினார்.

அவர்கள் கேட்கவில்லை, எனவே ஏன் பிரச்சனைகளை எழுப்புகிறார்கள்? சட்டம் மற்றும் நீதிக்கான கொள்கைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், எந்தவொரு குற்றச்சாட்டும் அடிப்படை இல்லை என்றால், இந்த பிரச்சனையில் நீங்கள் ஒருவரை தற்காப்புக்கு உட்படுத்த முடியாதுஎன்று அவர் கூறினார்.

இந்த வழக்கை காவல் துறையை பார்த்துக் கொள்வார்கள் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.