Home One Line P1 ஜோகூரில் 89 மாணவர்களுக்கு சளிக்காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது!

ஜோகூரில் 89 மாணவர்களுக்கு சளிக்காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது!

626
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள 89 பள்ளி மாணவர்களுக்கு சளிக்காய்ச்சல் (இன்ப்ளூயன்சா) கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது.

இது மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் உள்ள பல பள்ளிகளில், பாலர் பள்ளி மாணவர்கள் உட்பட நான்காம் படிவம் மாணவர்கள் வரையிலும் இந்நோய் பரவியுள்ளது.

#TamilSchoolmychoice

ஜோகூர் மாநில கல்வித் துறை இயக்குனர் அஸ்மான் அட்னான் கூறுகையில், பாசிர் கூடாங் பகுதியில் 32  மாணவர்களும், அதைத் தொடர்ந்து ஜோகூர் பாரு (24), கூலாய் (15), தங்காக் (6), குலுவாங் (5), மூவார் (5) , பத்து பாஹாட் (1) மற்றும் பொந்தியான் (1) மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகக் கூறினார்.

அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சுகாதாரப் பரிசோதனைக்கு அனுப்பியதன் மூலம் இது பள்ளிகளிலிருந்து அறியப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள நிலையான இயக்க முறைமைகளின் அடிப்படையில், இந்த நோய் குறித்த புகார்களினால் வகுப்புகள் அல்லது பள்ளிகளை மூடுவது தேவையில்லை என்றும் அவர் கூறினார்.