Home One Line P1 சிலாங்கூரில் புதிய நீர் கட்டண விகிதம் குறித்து முடிவு செய்யப்படவில்லை!- அமிருடின் ஷாரி

சிலாங்கூரில் புதிய நீர் கட்டண விகிதம் குறித்து முடிவு செய்யப்படவில்லை!- அமிருடின் ஷாரி

745
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூரின் புதிய நீர் கட்டண விகிதம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இது குறித்து மாநில அரசு, மத்திய அரசின் கருத்துக்களுக்காக இன்னும் காத்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

எந்தவொரு மாற்றங்களும் அல்லது புதிய நீர் கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து, மத்திய அரசால் ஒட்டுமொத்தமாக மற்ற மாநிலங்களுடன் செய்யப்படும் என்பதால், சிலாங்கூர் அரசாங்கத்தால் இந்த பிரச்சனையில் தனியாக செயல்பட முடியாது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், மாநிலத்தில் மக்களுக்கு புதிய நீர் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், விநியோக நிலைத்தன்மையின் நிலை மற்றும் நீர் தொழில் வசதிகளை பராமரிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் திறன் குறித்த பேச்சுவார்த்தைகள் முக்கிய அம்சங்களாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

விவாதங்கள் (நீர் கட்டணங்களுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து) பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. புதிய வீதத்தை அறிவிக்க நேரம் வந்து விட்டதாக இருந்தால், நாங்கள் அந்த முடிவை எடுத்து, எதிர்காலத்தில் அதை அறிவிப்போம், ”என்று அவர் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசின் நிர்வாகத்தை பொறுப்பேற்றதிலிருந்து, தற்போதைய இலவச நீர் கொள்கையை அமல்படுத்துவது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய நீர் கட்டண சரிசெய்தல் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்று அமிருடின் கூறினார்.