Home One Line P2 3000 மில்லியன் ரூபாய் வசூல் சாதனையை நோக்கி ‘தர்பார்’

3000 மில்லியன் ரூபாய் வசூல் சாதனையை நோக்கி ‘தர்பார்’

1197
0
SHARE
Ad

சென்னை – தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரை தானே வசூல் சக்கரவர்த்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவரது ‘தர்பார்’ படம் வெளியிடப்பட்ட முதல் வார இறுதியில் சென்னையில் மட்டும் 72.80 மில்லியன் ரூபாய் வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் முதல் நாள் வசூல் 183 மில்லியன் ரூபாய் எனக் குறிப்பிடுகிறது ஒரு புள்ளிவிவரம். மற்ற மொழிகளிலும் வெளியாகியிருப்பதால் இந்தியா முழுமையிலும் தர்பாரின் முதல் நாள் வசூல் 360 மில்லியன் ரூபாய்.

இந்தியில் மட்டும் முதல் நாளிலேயே 120 மில்லியன் ரூபாய்களை வசூலித்திருக்கிறது தர்பார்.

#TamilSchoolmychoice

திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடைபெறுவதாலும் படத்திற்கான விமர்சனங்கள் பாராட்டுகளாக இருப்பதாலும் இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து தர்பார் முதலிடத்தில் இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் எங்கிலும் திரையிடப்பட்ட நாடுகளிலும் வசூல் மழை பொழிந்து வருவதால் இதுவரையில் உலகம் எங்கும் சுமார் 1500 மில்லியன் ரூபாய் வசூலித்திருப்பதாக தமிழக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் மட்டும் முதல் இரண்டு நாட்களிலேயே 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது தர்பார்.

சுமார் 2000 மில்லியன் ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படமான தர்பார், உலகம் முழுவதும் 2800 கோடி ரூபாய் வரை வசூலித்தால்தான் வெற்றிப் படமாகக் கருதப்படும். ஆனால், தற்போது வசூல் நிலவரங்களின்படி இந்த வார இறுதிக்குள்ளேயே 3000 மில்லியன் ரூபாய் வசூலை தர்பார் தாண்டி விடும்.

இந்த வசூல் சாதனையை முறியடிக்க இன்னொரு ரஜினி படம் வந்தால்தான் உண்டு என்கின்றனர் சினிமா பார்வையாளர்கள்