Home One Line P2 மின்னல் பண்பலையில் இளையோருக்கு வழிகாட்டும் “விடியல்” – இரவு 10.15 மணிக்கு

மின்னல் பண்பலையில் இளையோருக்கு வழிகாட்டும் “விடியல்” – இரவு 10.15 மணிக்கு

832
0
SHARE
Ad
மின்னல் பண்பலையின் இன்றைய விடியல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் இரஞ்சிதம் கருப்பையா

கோலாலம்பூர் – மின்னல் பண்பலையில் இன்று புதன்கிழமை இரவு மணி 10.15 மணிக்கு “விடியல்” என்ற நிகழ்ச்சி ஒலியேறுகிறது. இடைநிலைக்கல்வியை முடித்த இளையோர்களின் எதிர்காலம் இன்னும் பத்து ஆண்டுகளில் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதை இந்நிகழ்ச்சி விளக்குகிறது.

வளர்ந்து வரும் தொழிற்துறைக்கு ஏற்றாற்போல் நாமும் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்குத் தேவையான தொழிற்துறை பயிற்சிகளைப் வழங்க ஜோம் டிவெட் (‘JOM TVET’) இயக்கம் உதவுகிறது. ஜோம் டிவெட்டின் இந்த சமுதாய கடப்பாடு மிக்க நோக்கத்திற்கு கை கோர்க்கிறது மின்னல் பண்பலை.

ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு மணி 10.15 முதல் 10.45 வரை “விடியல்” நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகின்றது. துரித வளர்ச்சியடைந்து வரும் உலகளாவிய தொழிலியல் புரட்சிக்கு இணையாக நம் இந்திய இளையோரை விடியலை நோக்கி வெற்றி நடை போடச் செய்யும் ஒரு முயற்சியாகவே இந்நிகழ்ச்சி மலர்கின்றது.

நளினி அச்சுதன் – விடியல் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்
#TamilSchoolmychoice

இளையோர் மட்டுமல்லாது பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பல பயனுள்ள தகவல்களை தாங்கி உதயமாகியுள்ளது “விடியல்”. இன்றைய நிகழ்ச்சியில் அரசாங்க TVET தொழில்திறன் பயிற்சி மையமான ஐஎல்பி (ILP) கூச்சாய் லாமாவில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்த முக்கியத் தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளவிருக்கின்றார் ஜோம் டிவெட் திட்டத்தின் சிலாங்கூர் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி. ரஞ்சிதம் கருப்பையா.

இன்று இரவு மணி 10.15 மணிக்கு ஒலியேறும் “விடியல்” நிகழ்ச்சியோடு இணைந்திருங்கள். இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நளினி அச்சுதன்.