Home One Line P2 பழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்

பழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்

2076
0
SHARE
Ad

மலாக்கா – நாடறிந்த பழம்பெரும் நடிகரும்,மேடை நாடகக் கலைஞருமான சிவாஜி ராஜா இன்று புதன்கிழமை (ஜனவரி 15) மலாக்காவில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை (ஜனவரி 16) மலாக்கா எம்பிஎம்பி ஜெலுத்தோங் (MBMB jelutong) என்ற இடத்தில் நடைபெறும்.

சிறந்த குரல் வளமும், நல்ல தமிழ் உச்சரிப்பும் கொண்ட சிவாஜி ராஜா, செல்வராஜ் என்ற இயற்பெயர் கொண்டவராவார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீது கொண்ட அபிமானம், அவரது வசனங்களைச் சிறப்பாக பேசி நடித்தது ஆகிய காரணங்களால் சிவாஜி ராஜா என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே அவரை அறியும் பெயராக நிலைத்து விட்டது.

வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சிவாஜி ராஜா ஏராளமாகப் பங்கு பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

“அவரது மறைவு மலேசியத் தமிழ் கலையுலகுக்கு பேரிழப்பு. அவரது இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என மலேசியத் தமிழ்க் கலைஞர் இயக்கத்தின் தலைவரான கே.பழனிசாமி தெரிவித்தார்.

மலேசியாவின் மேடைகளில் பலமுறை அரங்கேற்றப்பட்டு புகழ் கண்ட “இரத்தப் பேய்” நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்ற சிவாஜி ராஜா பின்னர் அந்த மேடை நாடகம் முதல் மலேசியத் தமிழ்ப் படமாக உருவாக்கம் கண்டபோது அதிலும் நடித்தார்.

மலேசியத் தமிழ்க் கலைஞர்களில் ஆரம்ப காலத்திலேயே மலாய் திரைப்படங்களிலும் நடித்த பெருமைக்குரியவர் சிவாஜி ராஜா ஆவார்.

தொடர்புக்கு :

கே.பழனிச்சாமி
மலேசிய தமிழ் கலைஞர்கள் இயக்கம்
019 2927306.