கோலாலம்பூர்: பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடரும் என்றும், தகுதியானவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்படும் என்றும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது நியாயமில்லை என்று இடைக்கால கல்வி அமைச்சரான பிரதமர் தெரிவித்தார்.
“மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடரும், ஆனால், அதனைப் பெற இயலாதவர்களுக்கு மட்டுமே.”
“அனைவருக்கும் காலை உணவை வழங்குவது என்பது பணக்காரர் மற்றும் (வீட்டில் சாப்பிடக் கூடியவர்கள்) கூட காலை உணவைப் பெறுவார்கள் என்பதாகும். எனவே, இது நியாயமில்லை.”
“நாங்கள் இந்தத் திட்டத்தைத் தொடர்வோம், ஆனால், தகுதியுள்ளவர்களை மட்டுமே கொண்டு சேர்ப்போம்” என்று இன்று வியாழக்கிழமை அவர் தெரிவித்தார்.
முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் முன்னர் அனைத்து மாணவர்களுக்கும் வருமான நிலையைப் பொருட்படுத்தாமல் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.