பிரிட்டன்: கம்பாரிடெக் (Comparitech) எனும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், சமூக ஊடகங்கள், அரசியல் அறிக்கையிடல், ஆபாச படங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்கள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இணைய சுதந்திரக் குறியீட்டில் மலேசியாவை மிகக் குறைவான இடத்தில் பட்டியலிட்டுள்ளது.
பால் பிஷோப் எழுதிய இன்டர்நெட் 2020: குளோபல் இன்டர்நெட் கட்டுப்பாட்டு வரைபடம் என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில், மலேசியா 10 புள்ளிகளில் 6 புள்ளிகளைப் பெற்றிருப்பதாக இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 47 நாடுகள் மற்றும் பிற பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காம்பரிடெக் மலேசியாவை தனியுரிமை மற்றும் கண்காணிப்பு ஆய்வில் ஐந்தாவது இடத்தில் வைத்திருந்தது.
“இந்த ஆய்வில், எந்த நாடுகளில் கடினமான இணைய கட்டுப்பாடுகள் உள்ளன, உலகில் மக்கள் இணையத்தில் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறார்களா என்பதை அறிய எங்கள் ஆராய்ச்சியாளர்கள் நாடு வாரியாக ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.”
“இவற்றில் ‘டொரண்டிங்’ (torrenting) , ஆபாசப் படங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் விபிஎன்–கள் மற்றும் ஊடகங்கள் தடுப்பு அல்லது தணிக்கை செய்வதற்கான கட்டுப்பாடு தடைகளும் அடங்கும்.”
“நாங்கள் ஒவ்வொரு நாட்டையும் ஐந்து அளவுகோல்களில் மதிப்பீடு செய்தோம். ஒவ்வொன்றும் இரண்டு புள்ளிகள் மதிப்புடையவை.”
அதிக புள்ளிகள் பெறப்பட்டிருந்தால், அதாவது இறுக்கமான கட்டுப்பாடு பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் “என்று பிஷாப் எழுதியிருந்தார்.