Home One Line P1 தமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்!

தமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்!

867
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் விவகாரம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீபா கோயாவின்  வாக்குமூலத்தை புக்கிட் அமான் பதிவுச் செய்தது.

குற்றவியல் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த (ஜேஎஸ்ஜே) 10 காவல் துறை அதிகாரிகள் குழு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்ததாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த திங்களன்று, சர்ச்சைக்குரிய உரையாடல்கள் பதிவுகளை வெளிப்படுத்திய பின்னர் லத்தீபாவின்  கௌரவத்தையும் நேர்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த சதி இருப்பதாக குற்றம் சாட்டி, எம்ஏசிசி அதிகாரி ஒருவர் காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்தார்.

#TamilSchoolmychoice

பல வழக்கறிஞர்கள் உட்பட இந்த சதிச் செயலில் தொடர்புடையதாகக் கூறப்படும் பெயர்களின் பட்டியலையும் அந்த அதிகாரி சமர்ப்பித்தார். அவர்களின் அடையாளம் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி, லத்தீபா கோயா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, நஜிப் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவு உண்மையானது என உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவற்றை வெளிப்படுத்தினார்.

பின்னர் எம்ஏசிசி இது தொடர்பாக காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்து, அந்த பதிவுகளை காவல் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தது.

1எம்டிபி தொடர்பாக சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை அம்பலப்படுத்தியதாக லத்தீபா கூறிய போதிலும், தாம் பொய் சொல்லவில்லை என்பதை அந்த உரையாடல்கள் நிரூபித்ததாக நஜிப் வாதிட்டுள்ளார்.

எம்ஏசிசி தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை நஜிப் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.