Home One Line P2 “மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை!”- இந்திய மத்திய வணிக அமைச்சர்

“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை!”- இந்திய மத்திய வணிக அமைச்சர்

975
0
SHARE
Ad

புது டில்லி: மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்ததாகக் கூறப்படும் விவகாரத்தை இந்திய மத்திய வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மறுத்துள்ளார்.

மலேசியா அல்லது துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நாங்கள் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவ்வாறு செய்வதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லைஎன்று நேற்று புது டில்லியில்ரைசினா உரையாடலில்பேசியபோது அவர் கூறினார்.

காஷ்மீர் பிரச்சனையில் அவர்களின் நிலைப்பாட்டின் காரணமாக மலேசியா மற்றும் துருக்கியிலிருந்து இறக்குமதியை தடை செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்கள் கூறுவதாக மேற்கோள் காட்டி வந்த ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

துருக்கிக்கு வணிக பற்றாக்குறை உள்ள நிலையில், மலேசியா, இந்தியாவுடன் வணிக உபரியை அனுபவிக்கிறது.

மலேசிய செம்பனை எண்ணெய் ஏற்றுமதியாளர்களை அதிகம் பாதிக்கக்கூடிய நடவடிக்கையான, சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெயை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதை இந்தியா தடைசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

மலேசியாவுக்கு எதிராக இந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கோயால் தெரிவித்தார்.

நாங்கள் விதிக்கும் எந்தவொரு தடையும் அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.