Home கலை உலகம் தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி?

தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி?

730
0
SHARE
Ad

Anjaliஐதாராபாத், ஏப்.8- ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

தமிழில் இவருக்கு ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட நிறைய படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. தற்போது ஆர்யாவுடன் ‘சேட்டை’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவர் படவிழாக்கள் மட்டுமல்லாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் தன்னுடைய தாயாருடனே வலம் வருவதை வழக்கமாக கொண்டு வந்தார். இருவரும் தாய்-மகள் என்ற உறவைத் தாண்டி நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தற்போது அஞ்சலி தனது தாயை பிரிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவர் தனக்கு தாயே இல்லை. அவர் ஒரு பேய் என தனது தாயைப் பற்றி காட்டமாக பேசி வருகிறாராம். மேலும் தனது தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் தனியாக குடியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் பிரிவுக்கு காரணம் என்னவென்பது மர்மமாகவே உள்ளது.