Home உலகம் இலங்கை தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே இருக்கும்: ராஜபக்சே அறிவிப்பு

இலங்கை தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே இருக்கும்: ராஜபக்சே அறிவிப்பு

576
0
SHARE
Ad

rajapasheஇலங்கை, ஏப்.8- இலங்கை அமைச்சரவை கூட்டம் கொழும்பில் கடந்த வாரம் நடந்தது. இதில் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். அப்போது, இலங்கை தேசிய கீதத்தில் சிங்கள மொழியுடன் தமிழ் மொழியையும் சேர்த்து கொள்வது குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார் கோரிக்கை விடுத்தார்.

அதை கேட்டதும் அதிபர் ராஜபக்சே ஆத்திரம் அடைந்தார். ஒரு நாட்டின் தேசிய கீதத்தை இரு மொழிகளில் பாடும் நாடு ஏதேனும் உண்டா? அவ்வாறு இருந்தால் அந்த நாட்டின் பெயரை எனக்கு தெரிவியுங்கள். இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது. சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என காட்டமாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, தேசிய கீதத்தில் தமிழ் மொழியையும் சேர்த்தால் சிங்கள புத்த தலைவர்களுடன் பிரச்சினை ஏற்படும். இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்க நான் தயார் இல்லை” என்றும் ராஜபக்சே கூறினார்.