கோலாலம்பூர் – மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் தமிழ்ப் பேரவையின் “பேரவைக் கதைகள்” எனும் சிறுகதை எழுதும் போட்டி மீண்டும் இவ்வாண்டு 34-ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.
மலேசியாவின் இலக்கிய வளர்ச்சியில் அதிகமான சிறுகதைகளை, அதாவது 640 சிறுகதைளை முதல் தொகுப்பிலிருந்து 32-ஆவது தொகுப்பு வரை அச்சிட்டுப் புத்தகமாக வெளியிட்டதால் 33-ஆவது பேரவைக் கதைகள் மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysian Book of Records) தடம் பதித்தது. இதனை மேலும் அங்கீகரிக்கும் வகையில் 34-ஆவது பேரவைக் கதைகள் அனைத்துலக அளவிலும் நடைபெறுகின்றது.
மலேசிய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மட்டுமல்லாது உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்களின் சிறுகதை எழுதும் திறனை போற்றுவதோடு அவர்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கும் வகையில் இச்சிறுகதைப் போட்டி இவ்வாண்டு வடிவம் காண்கிறது.
34-ஆவது பேரவைக் கதைகள் சிறுகதை எழுதும் போட்டி மாணவர் பிரிவு, பொதுப் பிரிவு மற்றும் அனைத்துல பிரிவு என்று மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகின்றது. மாணவர் பிரிவில் நான்காம் படிவம் தொடங்கி உயர்கல்விக்கூடங்கள் பயிலும் மாணவர்களும், பொதுப் பிரிவில் வயது வரம்பில்லாமல் மலேசிய பொது மக்களும், அனைத்துலக பிரிவில் வயது வரம்பில்லாமல் வெளிநாட்டவர்களும் கலந்து கொள்ளலாம். மாணவர் பிரிவிலும் பொதுப் பிரிவிலும் முதல் பத்து நிலையில் வெற்றிப்பெற்ற சிறுகதைகளும் அனைத்துலக பிரிவில் சிறந்த மூன்று சிறுகதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு நூல் வெளியீடும் காணும்.
போட்டிக்கான விவரங்கள்:
- தலைப்பு பொதுவானது.
- புதிய சிந்தனையிலான சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.
- சிறுகதைகள் சொந்தப்படைப்பாக இருத்தல் அவசியம். இதற்கு முன்னதாக அச்சில் வெளிவந்த படைப்பாக இருத்தல் கூடாது.
- சிறுகதைகளைக் கட்டாயமாக கணினியில் தட்டச்சுச் செய்து ‘pdf’ மற்றும் ‘doc’ முறையில் தபாலிலும் மின்னஞ்சலிலும் அனுப்ப வேண்டும்.
- சிறுகதைகள் 4-5 பக்கங்களில் இருக்க வேண்டும். எழுத்து அளவு 12, எழுத்துரு ‘Arial Unicode MS’, வரிக்கணக்கான இடைவெளி 1.0 ஆகும்.
- எழுத்தாளர்கள் சிறுகதைகளுடன் கீழ்கண்ட தங்களது முழுவிபரங்களை இணைத்து மின்னஞ்சல் மற்றும் தபாலில் கட்டாயம் அனுப்ப வேண்டும்:
(i) முழுப் பெயர்
(ii) தொலைப்பேசி எண்
(iii) முழு முகவரி
(iv) அடையாள அட்டை படியெடுப்பு
(v) உறுதிக் கடிதம்
(vi) கல்விக்கூடங்களின் சான்று படியெடுப்பு (மாணவர் பிரிவு மட்டும்)
(vii) நாட்டு உரிம அட்டை படியெடுப்பு (அனைத்துலகப் பிரிவு மட்டும்)
7. தட்டச்சு செய்யப்பட்ட சிறுகதை தபாலில் அனுப்பப்பட்டாலும், மேற்கண்ட முழு விபரங்களோடு அவசியமாக கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாகவும் அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு அனுப்பப்படாத கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
8. எழுதப்பட்ட சிறுகதை, பேரவைக் கதைகள் போட்டிக்காக மட்டுமே சுயமாக எழுதியது என்று போட்டியாளர்களின் கையொப்பமிடப்பட்ட உறுதிக் கடிதம் ஒன்றை உடன் இணைத்து அனுப்ப வேண்டும். உறுதிக் கடிதம் தமிழில் இருத்தல் அவசியம்.
9. மாணவர்கள் தாங்கள் சார்ந்துள்ள கல்விக்கூடங்களின் சான்றை இணைத்தல் அவசியமாகும்.
10. போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எழுத்தாளர்கள் தமிழ்ப் பேரவையினரையோ, இந்திய ஆய்வியல் துறையினரையோ எவ்வகையிலும் தொடர்புக் கொள்ளக் கூடாது.
11. நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.
12. போட்டியின் இறுதி நாளான 28 ஜனவரி 2020-க்குப் பிறகு அனுப்பப்படும் படைப்புகள் யாவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
அனுப்ப வேண்டிய தபால் முகவரி:
Antologi Carpen ke-34
Persatuan Bahasa Tamil Universiti Malaya,
Jabatan Pengajian India,
Fakulti Sastera dan Sains Sosial Universiti Malaya,
50603 Kuala Lumpur.
மின்னஞ்சல் முகவரி: தொடர்புக்கு:
34antologicerpen@gmail.com 016-5506741(கீர்த்தி லிங்கம்)
016-2544153 (சர்வினி குனசேகரன்)