Home One Line P1 “தொழில்நுட்ப அறிவை அதிகரிக்க இப்போதே மக்கள் தயாராக வேண்டும்!”- துன் மகாதீர்

“தொழில்நுட்ப அறிவை அதிகரிக்க இப்போதே மக்கள் தயாராக வேண்டும்!”- துன் மகாதீர்

796
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தொழில்துறை புரட்சியை எதிர்கொண்டு மலேசியர்கள், குறிப்பாக பணியாளர்கள், தொழில்நுட்பம் தொடர்பான அறிவை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.

முழு சமூகத்திற்கும் தொழில்நுட்பத்தை மிகவும் திறம்பட பயன்படுத்த கல்வி ஒரு முக்கிய அம்சமாக அமைகிறது என்று அவர் கூறினார்.

தொழில்நுட்பத்தைப் பற்றிய கல்வியும் புரிதலும் இனியும் காத்திருக்க முடியாது.”

#TamilSchoolmychoice

வேலை உலகில் உள்ளவர்கள் உட்பட அதனை வலியுறுத்த வேண்டும்என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை லங்காவி அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 5ஜி திட்ட அறிமுக நிகழ்ச்சியில் கூறினார்.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கி வணிகமயமாக்க திட்டமிடப்பட்டுள்ள 5ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், 5ஜிடிபி மூலம் பல புதிய விஷயங்கள் கற்றுக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், அறிவார்ந்த நகரங்கள், அறிவார்ந்த வேளாண்மை, உற்பத்தி, மின்னியல் சுகாதாரம், கல்வி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, மற்றும் அறிவார்ந்த சுற்றுலா உள்ளிட்ட ஒன்பது அம்சங்களை உள்ளடக்கிய 100-க்கும் மேற்பட்ட 5ஜிடிபி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.