Home One Line P1 “நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”

“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”

1064
0
SHARE
Ad

ஈப்போ – வீடு கட்டிக் கொள்ள தங்களுக்கென சொந்த நிலம் வேண்டுமென சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலப் போராட்டம் நடத்தி வந்த புந்தோங் வட்டார மக்களுக்கு இன்று விடிவு காலம் பிறந்தது. அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெம்பன் வட்டாரத்தில் வழங்கப்பட்டிருக்கும் சொந்த நிலப்பட்டாக்களுக்கு நில உரிமை வரி (பிரிமியம்) செலுத்துவதற்கான அறிவிக்கை (5A Notice) இன்று பேராக் மந்திரி பெசார் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 133 பேர்களுக்கு இந்த அறிவிக்கை வழங்கப்பட்டு, அடுத்த 3 மாதங்களுக்குள் இந்த நிலவரியை அவர்கள் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிவிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் 124 பேர்கள் நேரடியாக இந்த அறிவிக்கையைப் பெற்றுக் கொண்டனர். நிலப்பட்டா ஒதுக்கப்படும் மக்களில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் இந்தியர்களாவர்.

புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த மக்களுக்கு சொந்த நிலப்பட்டா வழங்கப்பட, நீண்டகாலமாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த பேராக் மாநில மஇகாவினருக்கும், இன்று நிலப்பட்டா கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த குறிப்பாக முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர், மஇகா பேராக் மாநிலத் தலைவர் டத்தோ வி.இளங்கோ, ஈப்போ பாராட் மஇகா தலைவர் எஸ்.ஜெயகோபி ஆகியோருக்கு நிலப்பட்டாக்கள் பெறும் மக்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

நிலப்பட்டா பெறுபவர்களில் சிலரை, அவர்களுக்கான நில உரிமை வரி செலுத்துவதற்கான அறிவிக்கைக் கடிதம் கிடைத்ததும் அவர்களை ஈப்போ பாராட் மஇகா தொகுதித் தலைவர் எஸ்.ஜெயகோபி நேரடியாக அழைத்துச் சென்று பெம்பன் நிலம் அமைந்துள்ள வட்டாரத்தை சுற்றிக் காண்பித்தார்.