கோலாலம்பூர்: கலால் வரிகளை மறுசீரமைப்பதில் அரசாங்கம் உடன்பாட்டை எட்டாததால், கார்களின் விலைகள் உயரும் எனும் ஊகத்தை நிதியமைச்சர் லிம் குவான் எங் மறுத்துள்ளார்.
இது குறித்து மாற்றம் ஏதேனும் இருந்தால், தற்போதைய கலால் வரி விகிதத்தை பாதிக்காது என்று அவர் கூறினார்.
“ஏதேனும் மாற்றம் இருந்தால், அது திடீரென இல்லாமல், படிப்படியாக செயல்படுத்தப்பட வேண்டும். உலக வணிக அமைப்புக்கான எங்கள் கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றுவதற்காக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக நாங்கள் இதைப் பற்றி பேசுகிறோம், ”என்று கோலாலம்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் காத்திருப்பார்கள் என்றும் சந்தையில் எந்த ஊகங்களுக்கும் ஆளாக மாட்டார்கள் என்றும் லிம் நம்புவதாகக் கூறினார்.