கோலாலம்பூர்: 2014 மற்றும் 2015-க்கு இடையில் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பல மில்லியன் ரிங்கிட்டுகளை செலவிட்டதாக டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அவரது தனது சொந்த கணக்கிலிருந்து செலவழிப்பதாக கருதியதாக அவர் கூறினார்.
இருப்பினும், அவை எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி என்பது தமக்குத் தெரியாது என்று நஜிப் கூறினார்.
வழக்கறிஞர் டத்தோ வி. சிதம்பரத்திற்கு பதிலளித்த நஜிப், ஜூலை மாதத்தில் தனது கணக்கில் வரவு வைக்கப்பட்ட 27 மில்லியனையும், 2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐந்து மில்லியனையும் செலவிட்டதாக ஒப்புக் கொண்டார்.
மற்றொரு கேள்வியில், நிக் பைசால் தனது கணக்கை நிர்வகித்து வந்ததால், 32 மில்லியன் ரிங்கிட் தனது கணக்கிற்கு மாற்றப்பட்டதை அவரிடம் கூறாதது ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று நஜிப் கூறினார். ஏனெனில், அக்கணக்கினை நிக் பைசால் கண்காணித்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.