Home One Line P2 கொரொனாவைரஸ்: 132 பேர் மரணம், 103 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்!

கொரொனாவைரஸ்: 132 பேர் மரணம், 103 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்!

564
0
SHARE
Ad

பெய்ஜிங்: சீனாவில் கொரொனாவைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது, சார்ஸ் நோயின் தாக்கத்தைக் காட்டிலும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் 2003-ஆம் ஆண்டு ஜூலை 31- க்கு இடையில், சீனாவில் 5,327 சார்ஸ் வழக்குகள் இருந்ததை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

1,459 புதிய கொரொனாவைரஸ் பதிவுகளும், 26 கூடுதல் இறப்புகள் (ஹூபேயில் 25 மற்றும் ஹெனானில் 1) உறுதிப்படுத்தப்பட்டதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இதன் மூலமாக மொத்த பதிவுகள் 5,974 என்று உறுதிப்படுத்தியுள்ளன.  இதில் 132 இறப்புகள் மற்றும் 103 குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.