கோலாலம்பூர்: சுரைடா கமாருடினுக்கு எதிராக அனுப்பப்பட்ட சம்மன் கடிதம், அவரது தரப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசியாகினிக்கு தகவல் அளித்த சைபுடின், அக்கடிதம் புத்ராஜெயாவில் உள்ள சுரைடா அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார்.
“ஜனவரி 20-ஆம் தேதி என்னால் கையெழுத்திடப்பட்ட அக்கடிதம் அவரது அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது” என்று அவர் கூறினார்.
அவதூறாகப் பேசியது குறித்து அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சைபுடின் சம்மன் கடிதத்தை அனுப்பியதாக நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எவ்வாறாயினும், இது சைபுடினின் தனிப்பட்ட கோரிக்கையாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது பிகேஆரின் நிலைப்பாடு அல்ல என்று அவர் தெரிவித்தார்.
சைபுடினிடமிருந்து தனக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று சுரைடா நேற்று செவ்வாய்க்கிழமை மலேசியாகினியிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.