Home வணிகம்/தொழில் நுட்பம் எதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்

எதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்

832
0
SHARE
Ad

கடும் போட்டிகளுக்கு இடையில் 2019-ஆம் ஆண்டுக்கான இறுதிக் காலாண்டில் மில்லியன் கணக்கான புது சந்தாதாரர்களை ஈர்த்துள்ளதாக நெட்பிலிக்ஸ் தெரிவித்துள்ளது. கட்டணம் செலுத்தி பொழுதுபோக்கு அம்சங்களையும், திரைப்படங்களையும் வழங்கும் சேவையைக் கொண்டுள்ள நெட்பிலிக்ஸ் எனினும், 2020-ஆம் ஆண்டில் தனது வணிக எதிர்பார்ப்புகளைக் குறைத்தே மதிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 5.5 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிய நெட்பிலிக்ஸ் 2019 இறுதிக் காலாண்டில் 587 மில்லியன் டாலரை இலாபமாக ஈட்டியிருக்கிறது.  2018-ஆம் ஆண்டை விட 31 விழுக்காடு நெட்பிலிக்சின் வருமானம் 2019-இல் உயர்ந்துள்ளது.

எதிர்பார்த்ததைவிட அதிகமாக கடந்த ஆண்டில் மட்டும் 8.8 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளதாகவும் இதன் மூலம் தங்களின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 167 மில்லியனாக உயர்ந்துள்ளது என்றும் நெட்பிலிக்ஸ் மேலும் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

2020-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மேலும் புதிதாக 7 மில்லியன் சந்தாதாரர்கள் தங்களின் சேவையில் இணைவார்கள் என்றும் நெட்பிலிக்ஸ் எதிர்பார்க்கிறது.

ஆப்பிள் டிவி பிளஸ், டிஸ்னி பிளஸ், போன்ற புதிய நிறுவனங்களின் வரவு ஏற்கனவே போட்டியில் இருக்கும் அமேசோன் பிரைம் ஆகிய போட்டிகளின் காரணமாக 2020-ஆம் ஆண்டுக்கான தங்களின் வருமான எதிர்பார்ப்பையும்,  இலாப எதிர்பார்ப்பையும் குறைத்தே நெட்பிலிக்ஸ் மதிப்பிட்டிருக்கிறது.