கோலாலம்பூர்: இனரீதியான பதட்டங்களை ஏற்படுத்தும் வகையில் போலி செய்திகளையும், வெறுக்கத்தக்க பேச்சையும் பரப்புவதில் சகிப்புத்தன்மை இனியும் காட்டப்படாது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
கொரொனாவைரஸ் குறித்த போலி செய்திகள் நாட்டில் பரவுவதை அதிகாரிகள் தடுக்கத் தொடங்கியது தொடர்பில் அவர் இவ்வாறு கூறினார்.
“மலேசியா மக்களைப் பயமுறுத்துவதற்காகவும், மலேசியாவில் உள்ள மக்களிடையே வெறுப்பைத் தூண்டுவதற்காகவும் வேண்டுமென்றே போலி செய்திகளை வெளியிடுவோர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் கூறினார்.