Home One Line P1 சிரியாவில் 56 மலேசியர்கள் இன்னும் தீவிரவாதத்துடன் தொடர்பில் உள்ளனர்!- காவல் துறை

சிரியாவில் 56 மலேசியர்கள் இன்னும் தீவிரவாதத்துடன் தொடர்பில் உள்ளனர்!- காவல் துறை

647
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிரியாவில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் 56 மலேசியர்கள் இன்னும் அங்கேயே இருப்பதாக புக்கிட் அமான்  பயங்கரவாத எதிர்ப்பு (8) சிறப்பு கிளை உதவித் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

ஆண்கள்அதிகமான எண்ணிக்கையில், அதாவது 19 பேரும், பெண்கள் (12), ஆண் சிறுவர்கள் (17), பெண் சிறுவர்கள் (எட்டு) பேரும் உள்ளனர்.

அதில், ஒன்பது பேர் மலேசியாவிற்கு திரும்ப வருவதற்கு விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களில் இருவர் பெண்கள், ஐந்து ஆண் சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் ஆவர்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மொத்தத்தில், 27 பேர் அல்ஹோவுல் முகாமில், ஒன்பது பேர் அல்ஹசாகா சிறைச்சாலையில், ஒருவர் இட்லிபில், 19 பேரின் அடையாளம் இன்னும் காணப்படவில்லைஎன்று அவர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

சிரியாவில் வெளிநாட்டினரிடையே, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் முகாம்களில், டாயிஸ் பயங்கரவாதிகளின் சித்தாந்தத்தை வலுப்படுத்தும் முயற்சி நடந்துள்ளது என்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.”

அவர்கள் மலேசியர்களையும் பிற நாடுகளின் மக்களையும் மீண்டும் டாயிஸ் ஆட்சிக்கு வருவார்கள் என்று நம்ப வைக்க முயற்சிக்கின்றனர், அவர்களில் சிலர் வீடு திரும்ப விரும்பவில்லைஎன்று அவர் கூறினார்.

ஆண்கள் இங்கு வந்தடைந்ததும், அவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்றும் அவர் விளக்கினார்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, உளவியலாளர்கள் மற்றும் மதங்களின் சேவைகளைப் பயன்படுத்தி அவர்களின் சித்தாந்தத்தை மதிப்பிடுவதற்கு சிறப்பு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் சிரியாவிற்கு ஏன் சென்றார்கள், அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்களா அல்லது ஏமாற்றப்பட்டார்களா என்பதற்கான பதில்களைப் பெறுவோம். “என்று அவர் கூறினார்.