Home One Line P2 கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 213-ஆக உயர்ந்தது!

கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 213-ஆக உயர்ந்தது!

511
0
SHARE
Ad

பெய்ஜிங்: நேற்று வியாழக்கிழமை முடிவில், கொரொனாவைரஸ் பாதிப்புக்குள்ளாகி மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 213-ஆக உயர்ந்தது.

கூடுதலாக 43 இறப்புகள் பதிவு செய்யப்பட்டு, 1,982 புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் இருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போதைக்கு, நாட்டில் 9,692 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஹூபே மாகாணத்தில் மட்டும், ஜனவரி 30-ஆம் தேதி நிலவரப்படி கூடுதலாக 42 இறப்புகளும், கூடுதலாக 1,220 உறுதிப்படுத்தப்பட்ட கொரொனாவைரஸ் நோய் அறிகுறிகளும் இருப்பதாக ஹூபே சுகாதார ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அம்மாகாணத்தில் மொத்தம் 204 இறப்புகளும், 5,806 நோய்க்கான அறிகுறிகளும் பதிவாகி உள்ளன.

உலகெங்கிலும் 8,200-க்கும் அதிகமான, கொரொனாவைரஸ் நோய்த் தொற்றுகள் வேகமாகப் பரவுவதால், உலகளாவிய சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.