Home One Line P1 “கணிதம், அறிவியல் பாடங்கள் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும்!”- துன் மகாதீர்

“கணிதம், அறிவியல் பாடங்கள் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும்!”- துன் மகாதீர்

896
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கணிதமும், அறிவியலும் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

நமது கல்வி முறையில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதும், அம்மொழியின் தேர்ச்சியை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் இடைக்கால கல்வி அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

ஆங்கிலத்திற்கு நேரத்தை ஒதுக்குவது சிறப்பானது,  மிக முக்கியமாக அறிவியல் மற்றும் கணிதத்தைக் கற்றுக்கொள்வதில் நேரத்தை செலவிட வேண்டும்.”

#TamilSchoolmychoice

புவியியல், வரலாறு போன்ற பாடங்கள் எந்த மொழியிலும் கற்கலாம், ஆனால், கணிதமும் அறிவியலும் நமக்கு பூர்வீக அறிவின் துறைகள் அல்ல. இது வெளிநாட்டிலிருந்து வந்தது.”

மேலும், இது ஆங்கிலத்தில் நமக்கு வருகிறது, எனவே அறிவியல் மற்றும் கணித கற்பித்தலில் நாம் ஆங்கிலத்தைப் பயன்படுத்தப் போகிறோம்,” என்று அவர் கூறினார்.

ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதங்களைக் கற்பித்தல் மற்றும் கற்றல் திட்டத்தை, கடந்த 2003-ஆம் ஆண்டில் டாக்டர் மகாதீர் காலத்தில், முதலாம் ஆண்டு, படிவம் ஒன்று மற்றும் படிவம் ஆறு மாணவர்களுடன் தொடங்கி கட்டங்களாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2013-இல் இரத்து செய்யப்பட்டது.

நாடும் மக்களும் கல்வி முறையில் சீர்திருத்தங்களைக் காண விரும்புகிறார்கள் என்று டாக்டர் மகாதிர் கூறினார்.

நாட்டில் கல்வியின் பங்கைப் பற்றி எனக்கு யோசனைகள் உள்ளன, இந்த நோக்கத்திற்காக, சில பலவீனங்களை கவனிக்க வேண்டும்.”

எனது கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன், இதன்மூலம் அதை அடைய நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியும்.”

நிச்சயமாக, எனது கருத்துக்கள் எப்போதுமே பிரபலமாகவோ அல்லது பலருக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகவோ இருக்காது. ஆனால், நம் குழந்தைகள் வளர்ந்து, வாழ்க்கையின் சிக்கல்களைச் சமாளிக்க சில விஷயங்களை நாம் தள்ளி வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்அதுதான் கல்வியின் நோக்கம்.” என்று அவர் குறிப்பிட்டார்.

பல இன நாடாக இருப்பது சில சிக்கல்களை ஏற்படுத்தினாலும், அது நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கக்கூடும் என்று பிரதமர் தெரிவித்தார்.