Home One Line P2 அமேசோன் பிரைம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 150 மில்லியனைத் தாண்டியது

அமேசோன் பிரைம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 150 மில்லியனைத் தாண்டியது

975
0
SHARE
Ad

கட்டணம் செலுத்தி இணையம் வழி திரைப்படங்களையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருவதால் அத்தகைய சேவைகளை வழங்கிவரும் அமேசோன் பிரைம் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 150 மில்லியனைத் தாண்டியிருக்கிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையில் அந்த நிறுவனப் பங்குகளின் விலைகள் 12.5 விழுக்காடு அதிகரித்தன.

#TamilSchoolmychoice

டிசம்பரோடு நிறைவடைந்த அமேசோனின் கடைசிக் காலாண்டில் அதன் வருமானம் 21 விழுக்காடு உயர்ந்து 87.4 பில்லியன் டாலராக இருந்தது.

3.3 பில்லியன் டாலர்களை இலாபமாகவும் அமேசோன் ஈட்டியுள்ளது.

அமேசோன் பிரைம் தங்களின் கட்டமைப்பையும் போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்த மேலும் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது.