Home One Line P1 தோபுவான் உமா சம்பந்தன் இறுதிச் சடங்குகள்

தோபுவான் உமா சம்பந்தன் இறுதிச் சடங்குகள்

1019
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் காலமான தோபுவான் உமா சம்பந்தன் அவர்களின் நல்லுடல் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 1) பிற்பகல் 4.00 மணிவரை கீழ்க்காணும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் :

1274, Jalan Tanjung,

46000 Petaling Jaya

#TamilSchoolmychoice

அதன் பின்னர் தோபுவான் அவர்களின் நல்லுடல் சுங்கை சிப்புட் கொண்டு செல்லப்பட்டு அங்கு கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவர்களின் குடும்ப இல்லத்தில் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருக்கும் :

No 52, Jalan Lintang
31100 Sungai Siput (U)
Perak.

நாளை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) காலை 11.00 மணியளவில் தோபுவான் அவர்களின் நல்லுடல் மேற்குறிப்பிட்ட சுங்கை சிப்புட் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சுங்கை சிப்புட் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள :

Kama at 0123900025
Dr Jaya at 0123185788

தனது இறுதிச் சடங்குகளின்போது மலர்வளையங்கள், பூங்கொத்துகள் வைத்து மரியாதை செய்வதைவிட, அதற்குப் பதிலாக, ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் அல்லது ஸ்ரீ சாரதா மடம் ஆகிய இயக்கங்களுக்கு நன்கொடைகள் வழங்கப்படுவதே தனக்கு செய்யும் சிறந்த இறுதி மரியாதையாக இருக்கும் என்பதை தோபுவான் தனது இறுதி விருப்பமாகக் கொண்டிருந்தார் எனவும் அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.