Home One Line P2 கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 361-ஆக உயர்ந்தது!

கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 361-ஆக உயர்ந்தது!

619
0
SHARE
Ad

பெய்ஜிங்: கொரொனாவைரஸ் தொடர்பான மரண எண்ணிக்கை கூடுதல் 57 இறப்புகளை பதிவுச் செய்து மொத்தம் 361 பேரை எட்டியுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், புதிதாக 2,829 பேர் இந்த கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மொத்தமாக 17,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறைந்தது 23 நாடுகளில் சுமார் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சீனவைத் தவிர்த்து, தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், தைவான், ஆஸ்திரேலியா, மலேசியா, மக்காவ், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, தென் கொரியா, ஜெர்மனி, சவுதி, கனடா, பிரிட்டன், வியட்நாம், இத்தாலி , இந்தியா, பிலிப்பைன்ஸ், நேபாளம், கம்போடியா, இலங்கை, பின்லாந்து, சுவீடன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாட்டிலும் இந்நோய் பரவியுள்ளது.

தாய்லாந்து, தைவான், ஜெர்மனி, வியட்நாம், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சீனாவுக்குச் செல்லாத நோயாளிகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.