Home One Line P1 1எம்டிபி: கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ய நஜிப் மற்றும் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் அனுமதி!

1எம்டிபி: கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ய நஜிப் மற்றும் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் அனுமதி!

549
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி உடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினரின் பொருட்களை ஆய்வு செய்ய கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

விண்ணப்பதாரருக்கு பொருட்களை ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”

“(பாதுகாப்பு குறித்த வழக்கறிஞர்களின் கவலைகள்) போதுமான கட்டுப்பாட்டுடன், அவர்களின் கட்டுப்படுத்தப்பட்ட வளாகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதன் மூலம் எளிதில் சமாளிக்க முடியும்.”

#TamilSchoolmychoice

இந்த பொருட்களின் பரிமாற்றம் மதிப்பு வீழ்ச்சிக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்று எனக்கு புரியவில்லை.”

எனவே, விண்ணப்பதாரர் பொருட்களை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு  நான் உத்தரவிடுகிறேன்என்று நீதிபதி முகமட் சைனி மஸ்லான் கூறினார்.

இருப்பினும், இந்த விசாரணைக்கு சைனி கூடுதல் நிபந்தனைகளை விதித்தார்.

முதலாவதாக, அரசு தரப்பு நியமிக்கப்பட்ட வளாகத்தில் இந்த ஆய்வு நடவடிக்கை நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இரண்டாவதாக, வழக்கறிஞரின் மேற்பார்வையுடன் விண்ணப்பதாரர் மட்டுமே பொருட்களை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவார். பின்னர், தமது முடிவினை மாற்றி இரு தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, பொருட்களை தொடுவதற்கு அனுமதி மறுக்கபட்டது.

மூன்றாவதாக, சோதனை ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்றும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் செய்யப்படும், இறுதியாக, விண்ணப்பதாரர் சோதனைக்குப் பிறகு மார்ச் 2-ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக,  நஜிப் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட பொருட்கள், பரிசாக ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது வாங்கியதா என்பதை தீர்மானிப்பதற்கு, அப்பொருட்களை ஆய்வு செய்ய முகமட் ஷாபி கேட்டுக் கொண்டார்.