Home One Line P1 சீனாவில் ஆளில்லா விமானங்கள் மூலம் கிருமி நாசினித் தெளிப்பு

சீனாவில் ஆளில்லா விமானங்கள் மூலம் கிருமி நாசினித் தெளிப்பு

614
0
SHARE
Ad

பெய்ஜிங்: கிருமி நாசினியைத் தெளிப்பதற்கும் கொரொனாவைரஸ் காரணமாக வெளியில் செல்ல அனுமதிக்கப்படாத மக்களுடன் பேசவும் சீனாவின் சில பகுதிகளில் ஆளில்லாத விமானங்கள் (ட்ரோன்கள்) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில், 426 பேரின் உயர்களைப் பறித்திருப்பதுடன் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோரைப் பாதிக்கச் செய்திருக்கும் கொரொனாவைரஸ்  பரவுவதைத் தடுக்க வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களைச் சீன அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மக்கள் கூடிவருவதைத் தவிர்க்க, சில இடங்களில் உள்ள பேரங்காடிகள், திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

கொரொனாவைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் கிருமி நாசினியைத் தெளிக்க  ட்ரோன் பயன்படுத்தப்படுவதை, தென் சீனாவின் ஹெஃபெய் எனும் நகரில் இருந்து கிடைத்த படக் காட்சி காட்டுகிறது.

ஷாண்டோங் மாகாணத்தின் கிங்சாவ் எனுமிடத்தில், உள்ளூர்ப் காவல் துறையினர், வீதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் ட்ரோன்களைப் பறக்கவிட்டுத் தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதும் தெரிய வருகிறது.

பெர்னாமா