Home One Line P1 “மலேசிய செம்பனை எண்ணெயை அதிகமாக வாங்குவதற்கு பாகிஸ்தான் தன்னால் முடிந்ததைச் செய்யும்!”- இம்ரான் கான்

“மலேசிய செம்பனை எண்ணெயை அதிகமாக வாங்குவதற்கு பாகிஸ்தான் தன்னால் முடிந்ததைச் செய்யும்!”- இம்ரான் கான்

751
0
SHARE
Ad
படம்: நன்றி துன் டாக்டர் மகாதீர் முகநூல் பக்கம்

கோலாலம்பூர்: புது டில்லி செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்வதில் ஒடுக்குமுறையை அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு சந்தித்த இழப்புகளை ஈடுகட்ட மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெயை வாங்க பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அதன் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சனையில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டின் நிலைப்பாடு குறித்து இந்தியா, மலேசியாவை அச்சுறுத்துவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

குறிப்பாக காஷ்மீர் போராட்டத்தை ஆதரித்ததற்காக இந்தியா மலேசியாவை அச்சுறுத்துவதை நாங்கள் உணர்கிறோம். அவர்கள் செம்பனை எண்ணெய் இறக்குமதியை குறைத்து மலேசியாவை அச்சுறுத்தினர்.”

#TamilSchoolmychoice

அதை சமநிலைப்படுத்த பாகிஸ்தான் தன்னால் முடிந்ததை செய்யும்என்று இம்ரான் கூறினார்.

இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் மகாதீருடன் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியாவுக்கு செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்வதில் மலேசியா எதிர்கொள்ளும் தடைகள் குறித்த பிரச்சனையை தாம் எழுப்பியதாக மகாதீர் கூறியிருந்தார்.

நாங்கள் செம்பனை எண்ணெய் விற்பனை செய்வது பற்றி பேசினோம். நிச்சயமாக, மலேசியாவிலிருந்து அதிக செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று மகாதீர் கூறினார்.