Home One Line P2 ‘அயலான்’: அண்டத்தைக் கடக்கும் பயணத்தில் சிவகார்த்திகேயன்!

‘அயலான்’: அண்டத்தைக் கடக்கும் பயணத்தில் சிவகார்த்திகேயன்!

1134
0
SHARE
Ad

சென்னை: தமிழ் திரையுலகில் தனக்கென்ற ஓர் இடத்தினை தக்க வைத்துக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு ‘அயலான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் தலைப்பினை காணொளி வடிவில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

“Ayalaan – Destination: Earth” என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் வேற்று கிரக வாசிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது .

#TamilSchoolmychoice

இப்படத்தை ‘இன்று நேற்று நாளை’ திரைப்படப் புகழ் இயக்குனர் ரவிகுமார் இயக்குகிறார்.

இந்த அறிவிப்பை இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், அறிவியல் சார்ந்த படமாக இருக்கும் என்பதால் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் குறுமுன்னோட்டத்தைக் காணலாம்.