Home One Line P1 “இரண்டு பள்ளிப் பைகள் நிறையப் பணத்தை ரோஸ்மா வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்!”- ஓட்டுனர்

“இரண்டு பள்ளிப் பைகள் நிறையப் பணத்தை ரோஸ்மா வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்!”- ஓட்டுனர்

1153
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மெயில்

கோலாலம்பூர்: ரோஸ்மா மன்சோரின் இல்லத்திற்கு இரண்டு பள்ளிப் பைகள் நிறைய பணத்தை அனுப்பியதாக ஓட்டுனர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனது முதலாளியான சைடி அபாங் சம்சுடினின் உத்தரவின் பேரில் கறுப்பு நிறத்தில் ஆரஞ்சு கோடுகளுடன் இரண்டு பள்ளிப் பைகளை வாங்கியதாக ஷாம்சுல் ரிசால் ஷார்பினி தெரிவித்தார். அவற்றை 45 ரிங்கிட்டுக்கு வாங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

“பின்னர் சைடி கூறியபடி அப்பைகளுடன் வங்கிக்குச் சென்றேன். சில 100 ரிங்கிட் பணக்கட்டுகளை பையில் வைக்கச் சொன்னார்கள். இந்த சம்பவம் மேபேங்க் கிடங்கில் நடந்தது.”

#TamilSchoolmychoice

“நான் பணத்தை கணக்கிடாமல் அவற்றை இரண்டு பைகளில் வைத்தேன். நான் பையை கொண்டு வந்து காரின் பின்புறத்தில் வைத்தேன், ” என்று ரோஸ்மா சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் வழக்கறிஞர் முஸ்தாபா குனியலாமின் முக்கியப் பரிசோதனையின் போது அவர் கூறினார்.

ரோஸ்மாவின் இல்லத்தில் எடுக்கப்பட்டப் படத்தைக் காட்டியபோது, ​​ பச்சை சோபாவை ஷாம்சுல் அடையாளம் கண்டார். அங்கு அவர் அப்பைகளையும் சைடியையும் இறக்கி விட்டதாகக் கூறினார்.

மேலும், சைடியும், ஜெபாக் ஹோல்டிங்ஸ் செண்டெரியான் பெர்ஹாட்டும், 1.2 பில்லியன் மதிப்புள்ள சரவாக் கிராமப்புற பள்ளிகளுக்கு சூரிய சக்தியை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சாட்சி கூறினார்.

ரோஸ்மா மீது 187.5 மில்லியன் ரிங்கிட் கோரியது மற்றும் இத்திட்டத்தில் 1.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்றதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை சாட்சியமளித்த மேடான் துவான்கு மேபேங்க் கிளை ஊழியரின் கூற்றுப்படி, சைடி, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதியன்று 5 மில்லியன் ரிங்கிட்டையும், 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதியன்று 1.5 மில்லியன் ரிங்கிட்டையும் வெளியிட்டதாகக் குறிப்பிட்டார்.