Home One Line P2 வயிற்று தொற்று சிகிச்சைக்குப் பிறகு சோனியா வீடு திரும்பினார்!

வயிற்று தொற்று சிகிச்சைக்குப் பிறகு சோனியா வீடு திரும்பினார்!

639
0
SHARE
Ad

புது டில்லி: இங்குள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் வயிற்று தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று புதன்கிழமை வீடு திரும்பியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

“அவர் வயிற்று நோய்த்தொற்றில் இருந்து மீண்டு இன்று (நேற்று) காலை வெளியேற்றப்பட்டார். வெளியேற்றும் நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இருந்தது” என்று சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் (மேலாண்மை வாரியம்) டாக்டர் டிஎஸ் ராணா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சனிக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மீதான உரையின் போதும் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை.