Home One Line P2 கொரொனாவைரஸ் பற்றி எச்சரித்த மருத்துவர் மரணம்!

கொரொனாவைரஸ் பற்றி எச்சரித்த மருத்துவர் மரணம்!

642
0
SHARE
Ad

பெய்ஜிங்: கொரொனாவைரஸ் இருப்பதைப் பற்றி எச்சரித்த சீனாவின் வுஹானில் பணிப்புரியும் மருத்துவர் டாக்டர் லி வென்லியாங் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.58 மணிக்கு காலமானார்.

இந்த விவகாரம் வுஹான் மத்திய மருத்துவமனைக்கு வெய்போ சமூக ஊடகக் கணக்கு வழியாக வெளியிடப்பட்டது.

“புதிய தொற்று காரணமாக நிமோனியாவால் பாதிக்கப்பட்ட கண் மருத்துவர் லி வென்லியாங், பல முயற்சிகள் எடுத்த போதிலும், பிப்ரவரி 7-ஆம் தேதியன்று அதிகாலை 2.58 மணிக்கு இறந்தார்.”

#TamilSchoolmychoice

“நாங்கள் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.