Home One Line P1 ஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை – பக்தி உரைகள் – வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடங்குகிறது

ஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை – பக்தி உரைகள் – வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடங்குகிறது

760
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் உள்ள முக்கியமான முருகன் ஆலயங்களில் நாளை சனிக்கிழமை கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் தனது வாடிக்கையாளர்களுக்கு நேரலைகள் மூலம் நிகழ்வுகளை வழங்கி வரும் ஆஸ்ட்ரோ இந்த ஆண்டும் தனது அலைவரிசைகளிலும், ஆஸ்ட்ரோ உலகம் வலைத் தளத்தின் மூலமும் தைப்பூசம் குறித்த நேரலைகளையும், பக்தி உரைகளையும் வழங்குகிறது.

தைப்பூசத்திற்கான முதல் நாளான இன்று வெள்ளிக்கிழமையே (பிப்ரவரி 7) மாலை 5.30 மணிமுதல் தைப்பூச நேரலை ஆஸ்ட்ரோவில் தொடங்குகிறது.

தைப்பூச நேரலைகளில் அருணகிரிநாதரின் திருப்புகழ் குறித்த உரைகள் இடம் பெறவிருக்கின்றன.

#TamilSchoolmychoice

வானவில் (அலைவரிசை 201) மற்றும் விண்மீன் எச்டி (அலைவரிசை 231) ஆகியவற்றில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நேரலைகள் ஒளிபரப்பாகும்.

இதுதவிர, எந்த இடத்திலிருந்தும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக வாடிக்கையாளர்கள் இந்த நேரலைகளைப் பதிவிறக்கம் செய்து தைப்பூச நிகழ்வுகளைக் கண்டு மகிழலாம்.