Home One Line P2 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்சி பெவிலியன் திரையரங்கு மூடப்படுகிறது!

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்சி பெவிலியன் திரையரங்கு மூடப்படுகிறது!

717
0
SHARE
Ad
படம்: நன்றி சினிமா அன்லைன்

கோலாலம்பூர்: கோல்டன் ஸ்கிரீன் சினிமா (ஜிஎஸ்சி) நிறுவனத்தின், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோலாலம்பூர் பெவிலியன் விற்பனை மையத்தில் அமைந்துள்ள அதன் திரையங்கு வருகிற பிப்ரவரி 16 முதல் மூட்டப்படும் என்று அந்நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பின்படி, அருகிலுள்ள ஜிஎஸ்சி திரையரங்குகளான மைடவுன், செராஸ், ஜிஎஸ்சி குயில் சிட்டி மற்றும் டி கார்டன் போன்றவற்றில் மக்கள் தங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை இன்னும் பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

படம்: ஜிஎஸ்சி டுவிட்டர் பக்கத்தில் வெளியான அறிவிப்பு

“ஜிஎஸ்சி பெவிலியன் திறக்கப்பட்டதிலிருந்து (சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு) சினிமாவுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம்.”

#TamilSchoolmychoice

“ஜிஎஸ்சி புதிய இடத்தில் திறக்கப்படுவதை எதிர்பாருங்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.