கோலாலம்பூர் – மலேசியர்கள் இந்த ஆண்டு தைப்பூச நேரலையை ஆஸ்ட்ரோவில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம். இணையம் (ஆன்லைன்) வாயிலாகவும் ஆஸ்ட்ரோ உலகம் வழியாகவும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாகவும், வானவில் மற்றும் துல்லிய அலைவரிசையான விண்மீன் எச்டி வழியாகவும் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து கண்டு மகிழலாம்.
பிப்ரவரி 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் மலேசியர்கள் இணையம் வழி (ஆன்லைனில்) ஆஸ்ட்ரோ உலகம் வாயிலாக இந்த ஆண்டு தைப்பூச நேரலையை பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் பிப்ரவரி 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் ஆஸ்ட்ரோ கோ செயலியின் வழி வானவில் (அலைவரிசை 201) மற்றும் துல்லிய அலைவரிசையான விண்மீன் எச்டி (அலைவரிசை 231) ஆகியவற்றில் தைப்பூச நேரலை ஒளிப்பரப்பை பதிவிறக்கம் செய்து இவ்வருட தைப்பூசத் திருநாளை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடலாம். நேரலை ஒளிபரப்பு ஈப்போ, பினாங்கு மற்றும் சுங்கைப் பட்டாணியில் அமைந்துள்ள பிரபல ஆலயங்களிலிருந்து இடம்பெறும்.
தங்களுக்கு விருப்பமான தைப்பூசப் புகைப்படங்கள் ஆஸ்ட்ரோ உலகம் நேரலையில் இடம் பெற வேண்டும் என எண்ணும் மலேசியர்கள் அவ்வரிய வாய்ப்பினை தன்வசமாக்க அப்புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் #VelVel என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் இவ்வருட தைப்பூசத்தை மேலும் மெருகூட்ட பல்வேறு பக்தி நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். அவை பின்வருமாறு:
- மருத்துவ நிபுணர், டாக்டர் ஜெயா பாலன் வள்ளியப்பன் மற்றும் மலேசிய சைவ நற்பணி கழகத் தலைவர், தர்மலிங்கம் நடராஜன் விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கும் அருணகிரிநாதரின் திருப்புகழை முக்கிய கருவாக கொண்ட உரை நிகழ்ச்சியை ரேவதி மாரியப்பன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியை வானவில் (அலைவரிசை 201) மற்றும் விண்மீன் எச்டி (அலைவரிசை 231) ஆகியவற்றில் கண்டு ரசிக்கலாம்.
• துணைவன், திருவருள், தைப்பூசம், கந்தர் அலங்காரம் போன்ற திரைப்படங்களை வெள்ளித்திரையில் (அலைவரிசை 202) கண்டு களிக்கலாம்.
- ‘காவடி ஏந்துபவரின் ஒரு பயணம்’ எனும் மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான ராகாவின் தைப்பூச பிரத்தியேக ஆவணப்படத்தை ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம், சமூக ஊடகத் தளங்கள் மற்றும் ஷோக் (SYOK) செயலின் வாயிலாக மலேசியர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.
- அதுமட்டுமின்றி, ராகா அறிவிப்பாளர்கள் பத்துமலை, பினாங்கு, ஈப்போ மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களிலிருந்து அவ்வப்போது இடம் பெறும் தைப்பூச கொண்டாட்டங்களின் சிறப்பு விபரங்களை நேரலையாக ராகாவில் பகிர்ந்து கொள்வர்.
- மலேசியர்கள் தங்களது மகிழ்ச்சியான தைப்பூசத் தருணங்களை இன்ஸ்டாகிராமில் #raagavel2020 என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்வதன் மூலம் பிப்ரவரி 9 வரை பிரத்தியேக ராகா பொருட்களை வெல்லும் அரிய வாய்ப்பைப் பெறலாம்.