Home One Line P2 ஆஸ்கார்: முதல் முறையாக தென் கொரிய படமான “பாராசைட்” சிறந்த படமாகத் தேர்வு!

ஆஸ்கார்: முதல் முறையாக தென் கொரிய படமான “பாராசைட்” சிறந்த படமாகத் தேர்வு!

694
0
SHARE
Ad

ஹாலிவுட்: தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல திரைப்படமான “பாராசைட் ” இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது.

அது மட்டுமின்றி , இத்திரைப்படம் சிறந்த அனைத்துலகப் படம், சிறந்த அசல் திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதையும் தட்டிச் சென்றுள்ளது.

லாங் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (அமெரிக்க உள்ளூர் நேரம்) நடைபெற்ற 92-வது அகாடமி விருதுகளின் வெற்றியாளராக போங் ஜூன்-ஹோ சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றார்.

#TamilSchoolmychoice

இந்த படம் ரியான் ஜான்சனின் “நைவ்ஸ் அவுட் “, “மேரேஜ் ஸ்டோரி”, “1917” மற்றும் “ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்” ஆகிய திரைப்படங்களின் வரிசையில் இடம்பெற்றிருந்தது.

ஒரு கொரிய படம் ஆஸ்கார் விருதை வென்றது இதுவே முதல் முறை. அதுவும், நான்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.