பெய்ஜிங்: கொரொனாவைரஸ் பாதிப்பால் மேலும் 2,478 புதிய வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 108 கூடுதல் இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் ஏற்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை இரவு நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 42,638 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 1,016 பேர் இறந்துள்ளதாகவும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் திங்கட்கிழமை கூடுதலாக 103 இறப்புகள் மற்றும் 2,097 புதிய உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் கொடிய நிமோனியா மற்றும் கொரொனாவைரஸ் தொடர்பானவை என்று அது தெரிவித்தது.
ஹூபே மாகாண சுகாதாரக் குழுவின் கூற்றுப்படி, அம்மாகாணத்தில் 974 பேர் இறந்துள்ளனர் என்றும், அங்கு மட்டும் இதுவரை மொத்தம் 31,728 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.