Home One Line P2 டில்லி சட்டமன்றத் தேர்தலில் வெல்லப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

டில்லி சட்டமன்றத் தேர்தலில் வெல்லப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

601
0
SHARE
Ad

புது டில்லி: டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு (இந்திய நேரப்படி) கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் டில்லியை ஆட்சி செய்வார்கள் என்பது இன்று தெரிந்துவிடும்.

டில்லி சட்டமன்றத் தேர்தலுக்காக வெளியிடப்பட்டக் கருத்துக் கணிப்பு முடிவுகள்படி, டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு (ஆம் ஆத்மி) வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு தேர்தலில் கெஜ்ரிவால் வெற்றி பெற்றால், 2015-ஆம் ஆண்டு தேர்தலில் 67 இடங்களை வெல்ல முடிந்த அவரது கட்சிக்கு இது ஹாட்ரிக்- ஆக அமையும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, அனைத்து கருத்துக் கணிப்புகளும் பிப்ரவரி 11-ஆம் தேதியன்று தவறு என நிரூபிக்கப்படும் என்று டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“பாஜக 48 இடங்களுடன் டில்லி அரசாங்கத்தை அமைக்கும். தயவுசெய்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூற வேண்டாம்,” என்று திவாரி பதிவிட்டுள்ளார்.

மொத்தமாக 62.59 விழுக்காடு வாக்குப்பதிவு இம்முறை நடந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தார்.