Home One Line P1 “நான் பிரதமராக நீடித்திருப்பதை ஆதரிக்கும் பாஸ் கட்சிக்கு நன்றி!”- துன் மகாதீர்

“நான் பிரதமராக நீடித்திருப்பதை ஆதரிக்கும் பாஸ் கட்சிக்கு நன்றி!”- துன் மகாதீர்

705
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தம் தலைமைக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வருவதற்கான பாஸ் கட்சியின் நடவடிக்கை குறித்து தனக்குத் தெரியாது என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

இருப்பினும், அவர்களின் ஆதரவை வரவேற்பதாக டாக்டர் மகாதீர் கூறினார்.

“அவர்கள் (பாஸ் ) என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.”

#TamilSchoolmychoice

“நான் பிரதமராக ஆகி விட்டேன் . அவர்கள் என்னை ஆதரிக்க விரும்பினால், நன்றி, ”என்று அவர் சுருக்கமாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று, பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், அடுத்த மாத நாடாளுமன்றத்தில் மகாதீரின் தலைமைக்கு ஆதரவாக கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டுவர இருப்பதாகக் கூறப்பட்டது.

பதவிக்காலம் முடியும் வரை பிரதமரின் தலைமையை ஆதரிக்கும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு , நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் கூறினார்.

மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், பாஸ் கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆதரிப்பதற்கான வாய்ப்பை அம்னோ கட்சியும் நிராகரிக்கவில்லை.

இருப்பினும், அதன் துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறுகையில், கூட்டு முடிவை எடுப்பதற்கு முன் முவாபாக்காட் நேஷனல் கூட்டத்தில் அம்னோ, பாஸ் கட்சியின் விளக்கத்தை நாடும் என்று அவர் கூறினார்.