Home கலை உலகம் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்

விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்

785
0
SHARE
Ad

சென்னை : ஜன.23-SLIDER KAMALமனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் தலைமையில் 21 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து புகார் கொடுத்தனர்.

பின்னர், ஜவாஹிருல்லா கூறுகையில்,  முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ள விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும். இப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல காட்டி உள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று கமலஹாசன் மறுத்து வந்தார். ஆனால் அண்மையில் முஸ்லிம் அமைப்புகளுக்காக பிரத்யேகமாக இந்தப் படம் திரையிடப்பட்டது.

#TamilSchoolmychoice

அதை பார்த்த முஸ்லிம் தலைவர்கள் கொதிப்படைந்துள்ளனர். படம் வெளியிடப்பட்டால் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். எனவே படத்தை தடை செய்ய வேண்டும். இதுகுறித்து கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றும்  ஜவாஹிருல்லா கூறினார்.