Home One Line P2 கொவிட்-19: 1,113 பேர் பலி, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொவிட்-19: 1,113 பேர் பலி, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

663
0
SHARE
Ad
படம்: நன்றி ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: கொவிட்-19 காரணமாக சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,113 பேரை எட்டியுள்ளது. இதுவரை 44,437 பேர் இந்த கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், 4,638 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தும் வருகிறது.

இன்று புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 29 நாடுகளை உள்ளடக்கிய 44,914 கொவிட்-19 தொற்று வழக்குகள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாயன்று, உலக சுகாதார நிறுவனம் , கொரொனாவைரஸ் என அடையாளப்படுத்தி வந்த இந்த நோய் தொற்றுக்கு கொவிட்-19 என்று பெயரிட்டது.