Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வானொலி மலேசியர்களுக்கு இலவச பராமரிப்பு தொகுப்புகளை வழங்குகிறது

ஆஸ்ட்ரோ வானொலி மலேசியர்களுக்கு இலவச பராமரிப்பு தொகுப்புகளை வழங்குகிறது

617
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியர்கள் பிப்ரவரி 22 வரை கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள இடங்களில் “காமி கேர்” (Kami Care) என்ற திட்டத்தின்வழி இலவச பராமரிப்புத் தொகுப்புகளைப் பெறலாம். “ஷோக்” (SYOK) செயலியின் வழியாக மேல் விபரங்களை நேயர்கள் அறிந்து கொள்ளலாம்.

MIX வானொலியிலிருந்து Phat Fabes மற்றும் SINAR வானொலியிலிருந்து Hefny Sahad, செராஸ் தாமான் ராகானில் அமைந்துள்ள பெட்ரோனாஸில் மலேசியர்களுக்கு ‘Kami Care’ தொகுப்புகளை வழங்கும் காட்சியை மேலே காணலாம்.

KAMI CARE திட்டம் பற்றிய சில விபரங்கள்:

#TamilSchoolmychoice

• அண்மையில் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் தொற்று நோயை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மலேசியர்கள் எடுக்கும் வகையில் அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் புருடென்சியல் (Prudential) மற்றும் டெட்டோல் (Dettol) நிறுவனத்தின் “பல்ஸ்” (Pulse) உடன் இணைந்து பிப்ரவரி 10 முதல் 22 வரை ‘Kami Care’ பராமரிப்பு பரிவர்த்தனை பிரச்சாரத்தை ஆஸ்ட்ரோ வானொலி ஆரம்பித்துள்ளது.

• இத்தொற்று நோயின் விளைவாக, கடைகளில் முகக் கவசங்கள் மற்றும் கை துப்புரவாக்கிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆஸ்ட்ரோ வானொலி பிரமுகர்கள் ‘Kami Care’, வாயிலாக ஒவ்வொரு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களிலும் முதல் 50 மலேசியர்களுக்கு முகக் கவசங்கள், கை துப்புரவாக்கிகள் மற்றும் கை கழுவும் திரவங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்குவார்கள்.

• ‘Kami Care’ கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட இடங்களில் காலை 8 மணியிலிருந்து 9 மணி வரையிலும் மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரையிலும் இருப்பர் (இவ்வாரத்திற்கான இடங்களைப் கீழே பார்க்கவும்).

KAMI CARE – இடங்கள் • 12 – 14 பிப்ரவரி முதல் ‘Kami Care’ இடங்கள்:

• மேலும் புதிய இடங்களை அறிந்துக் கொள்ள SYOK செயலியின் வழியாக ஆஸ்ட்ரோ வானொலியுடன் இணைந்திருங்கள்!

பதிவிறக்கம்

Google Play Store அல்லது Apple App Store-இருந்து SYOK செயலியை பதிவிறக்கம் செய்க. SYOK-இல் 25 வானொலி தளங்கள், பாட்காஸ்ட்கள் (Podcast), காணொளிகள் மற்றும் பலவற்றைக் கண்டு அனுபவிக்கலாம்.